சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை வைக்கவில்லை! – சென்னை காவல்துறை விளக்கம்

Notice that action will be taken against those spreading false news by contacting the Chennai Metropolitan Police.

Hero Image

சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை, நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறும், இவ்வாறு தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை வைக்கவில்லை! – சென்னை காவல்துறை விளக்கம்