பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்திறமை இல்லாமல் குளறுபடியாக உள்ளது என ஜெயக்குமார் விமர்சனம்.
ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாமக ஒருநாள் கடையடைப்பு நடத்தினால் அதிமுக எதிர்க்கட்சி இல்லை என சொல்லக் கூடாது.
unknown nodeமக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. திமுக அரசுக்கு மத்திய அரசை எதிர்க்கும் திறமை கிடையாது; திமுக அரசில் போராட்டம் செய்யக்கூட அனுமதி வழங்கப்படுவதில்லை.
குரூப் 4 தேர்வு எழுதி பல மாதங்களாகியும் இப்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. வருமா ? வராதா ? வரும் ஆனால் வராது என்பது போல் உள்ளது. பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்திறமை இல்லாமல் குளறுபடியாக உள்ளது என விமர்சித்துள்ளார்.