#BIGBREAKING : வரும் 27 ஆம் தேதி விடுதலையாகவுள்ள சசிகலாவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ?

Sasikala reportedly suffers from slight fever and cough at Parapanna Agrahara prison. Doctors attending to her condition.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.இதனிடையே சசிகலாவின் விடுதலை குறித்து அவரது வழக்கறினரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி கடிதம் கிடைத்திருக்கிறது.அந்த கடிதத்தில், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை காலை சசிகலா விடுதலையாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சுவாச பிரச்சினையால்  சசிகலா பாதிக்கப்பட்டுள்ளதாக   தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BIGBREAKING : வரும் 27 ஆம் தேதி விடுதலையாகவுள்ள சசிகலாவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ?