சசிகலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர்

Sasikala Natarajan is stable and comfortable - Hospital Medical superintendent Doctor Ramesh Krishnan today says

சசிகலா நலமாக இருக்கிறார் என்று விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா கூறுகையில்,சசிகலாநலமாக இருக்கிறார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கான கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன.7அல்லது 10 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ்செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.