சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ! அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதி

Sasikala being taken to Bowing Hospital from jail hospital in Bengaluru as her Oxygen level continues to go down

பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையிலுள்ள சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.மேலும் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில்,சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.