ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது இணைக்க முடிவு – தமிழருவி மணியன் அறிவிப்பு

When the Rajinikanth party starts, it has been decided to merge with the Gandhian People's Party, said Tamilruvi Maniyan.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது காந்திய மக்கள் கட்சியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே இன்று  தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை  மேற்கொண்டார்.ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழருவி மணியன்,காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது அதனோடு இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு காந்திய மக்கள் கட்சி என்ற கட்சி உருவானது. இதன் முதல் தலைவராக தமிழருவி மணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.