முன்னாள் காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜாஜி பேரனுமான சி.ஆர்.கேசவன் பாஜகவில் இணைந்தார்
இந்தியாவின் முதல் கவர்னரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர் கேசவன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை எனக் குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
அவருக்கு தேசிய அளவில் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சி.ஆர்.கேசவன் கூறுகையில், பிரதமர் மோடி தமிழகத்தில் இருக்கும் இந்த நாளில், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவில் என்னை இணைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
unknown nodeமேலும், பிரதமர் மோடியின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், ஊழலற்ற ஆட்சி மற்றும் சீர்திருத்தம் தலைமையிலான உள்ளடக்கிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் ஆகியவை இந்தியாவை பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிஆர் கேசவன் கூறினார்.
unknown node