இன்று மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி...!

Former Congress president Rahul Gandhi is going on a two-day visit to Manipur today and tomorrow.

Rahulgandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மற்றும் நாளை என  இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் செல்ல உள்ளார்.

கடந்த மே மாதம் தொடக்கத்தில் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூக பிரிவினர்களுக்கு இடையே தொடர்ந்த மோதலானது இன்னும் நீடித்து வருகிறது. இந்த நாள் வரையில் மணிப்பூர் மாநிலம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இந்த வன்முறையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களது வீடுகளை இழந்து நிற்கின்றனர்.

இந்த நிலையில், கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மற்றும் நாளை என  இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் செல்ல உள்ளார். அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேச உள்ளார்.