தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் வாழ்த்து
அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.