நவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.
இன்று நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழா வரும் 15ம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துக்கள். வருகிற நாட்களில் ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன. இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும் என்று வாழ்த்து தெரிவித்து, துர்க்கை கடவுளை வழிபடுவது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
unknown node