முதுமலை யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் வருகை..! வரும் 5ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!

President visits Mudumalai Elephant Camp..! Tourists are not allowed to go till the 5th..!

Droupadi Murmu

குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு முதுமலை யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வரும் 5ம் தேதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க, முதுமலைக்கு வருகை தர உள்ளார்.‘The Elephant Whisperers’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், முதுமலையைச் சேர்ந்தபொம்மன்–பெள்ளிநாடு முழுவதும் பிரபலமாகினர்.

இதனை தொடர்ந்து,ஆஸ்கர்  விருது வென்ற பொம்மன் – பெள்ளி தம்பதிக்குகுடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.