அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது – அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji said that the power outage during Union Home Minister Amit Shah's visit was accidental.

Mnister V SenthilBalaji

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது தான் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.

நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அவர்களை பார்ப்பதற்காக காரை விமான நிலைய வாயில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இது குறித்து பாஜக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது தான். ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது – அமைச்சர் செந்தில் பாலாஜி