தொடர்ந்து 13 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் ,டீசல்

Petrol and diesel sold unchanged for the 13th consecutive day

தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 13 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் விலை 94.39க்கும் விற்பனையாகிவருகிறது.மேலும் டெல்லியில் பெட்ரோல் ரூ.101.84க்கும், டீசல் விலை 89.87க்கும் விற்பனையாகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை ரூ.107.83க்கும், டீசல் 97.45க்கும் விற்பனையாகிறது.பெங்களூரில் பெட்ரோல் விலை ரூ.105.25க்கும்,டீசல் 95.26க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து 13 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் ,டீசல்