கடுமையான ஒழுங்குகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி
unknown nodeஇந்த நிலையில், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குகளுடன் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்.மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.