#Breaking:மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு...!

Parliament was adjourned until 12 noon as opposition parties raised their voices against the Pegasus

எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று காலை ஆலோசனை நடத்திய சூழலில்,பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வருகை புரிந்தனர்.

இந்நிலையில்,பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மையப் பகுதியில் கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலங்களவையானது 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல ,மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அங்கும் முழக்கங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும்,சபாநாயகர் ஓம் பிர்லா தொடர்ந்து அவையை நடத்தி வருகிறார்.

முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்பு புகார் தொடர்பாக இரு அவைகளிலும் தற்போது முழக்கங்கள் எழுந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.