பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் – டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என டிடிவி தினகரன் பேட்டி.

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என டிடிவி தினகரன் பேட்டி.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை. 0.25% கூட அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை.

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. மிகப்பெரிய விரக்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓர் அணியாக சென்றால்தான் திமுகவை எதிர்க்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக அணிலை போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணிக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 வாய்ப்பு தான் உள்ளது. அதில் ஒன்றோடு தான் கூட்டணி வைக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்து நிற்கவும் தயார்.வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க தயாராக உள்ளேன். அதிமுகவின் தலைமையே யார் என தெரியாத நிலையில் தனது தலைமையில் மெகா கூட்டணி என்கிறார் இபிஎஸ் என தெரிவித்துள்ளார்.