அளவுகோலை மீறும் போது தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் – செல்லூர் ராஜு

உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு பேட்டி.

Sellur raju

உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு பேட்டி.

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜு  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், மதுரையில் தொண்டர்கள் அதிமுக மாநாட்டை நடத்துகிறார்கள்எ. குடும்பம் குடும்பமாக மாநாட்டில் அதிமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுக மாநாட்டிற்கு தானாக கூட்டம் சேரும். நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை சோதனை குறித்து பேசிய அவர், அமலாக்கத்துறை அளவுகோலை மீறும் போது தான் சோதனையை நடத்தும். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.