வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று தமிழக ஆளுநர், 4 மாதங்கள் கடந்தும், இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் ட்வீட்
இதற்க்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும்.
வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.