அண்ணாமலை ஹெலிகாப்டர் பயணத்தில் விதிமீறல் இல்லை என்று கர்நாடக தேர்தல் அதிகாரி விளக்கம்
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தல் பரப்புரைக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்றிருந்தார். கர்நாடகாவில் உடுப்பி, கல்பு ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் பணிக்காக தமிழகத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் குற்றசாட்டு
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் அண்ணாமலை மீது குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் அண்ணாமலை சென்றதாக கூறியுள்ளார். எனக்கு வந்துள்ள தகவலின் படி அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளேன். எனக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் எஅண்ணாமலை ஹெலிகாப்டர் பயணத்தில் இல்லை என்றும் அவர் பயணித்த ஹெலிகாப்டர் மற்றும் தயங்கி இந்த அறையில் எந்த விதிமுறைகளும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்ன தெரிவித்து இருந்தார்.
அண்ணாமலை விளக்கம்
unknown nodeஇதுகுறித்து விளக்கமளித்த அண்ணாமலை, நான் சாமானியன். எங்களுடைய கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு. காலவிரயத்தை தவிர்ப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என வினய்குமார் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
கர்நாடகா தேர்தல் அதிகாரி விளக்கம்
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கர்நாடகா தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து கர்நாடகா தேர்தல் அதிகாரி கூறுகையில், அண்ணாமலை ஹெலிகாப்டர் பயணத்தில் விதிமீறல் இல்லை என்றும், அவர் பயணித்த ஹெலிகாப்டர் மற்றும் தங்கி இந்த அறையில் எந்த விதிமுறைகளும் இல்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.