ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண புகார்கள் ஏதும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொங்கலுக்கு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல, 2வது நாளாக கூடுதலாக 1,855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண புகார்கள் ஏதும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.