பயம் காட்டி அரசியல் செய்யலாம் என ஆர் எஸ் பாரதி நினைக்கிறார் என அண்ணாமலை பேச்சு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அப்போது பேசிய அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி முரளி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அண்ணாமலை அவர்கள் விருதுநகராக கலந்து கொண்டு சென்ற பின் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் அது பாஜகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் ஏற்பாடு செய்த நிகழ்வு. நான் விருந்தினராக தான் சென்றேன். அதிமுக அவரை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து கருத்து கூற முடியாது. மற்ற கட்சியினரை நாங்கள் பல இடங்களில் சந்தித்து பேசுகிறோம். இதற்கெல்லாம் கட்சியை விட்டு நீக்கினால் தமிழக அரசியல் எங்கே போய் முடியும் தமிழ்நாடு அரசியல் எப்படி செல்கிறது? யார் யாரை போட்டியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக யாரையும் பலவீனப்படுத்தி வளராது. பாஜகவோ அல்லது அண்ணாமலையோ யாரையும் போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் ஆரோக்கியமாக தான் அரசியல் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். பின் கோவை பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர் முத்துசாமி மீது எனக்கு மரியாதை உண்டு அவர் நேர்மையாக அரசியல் செய்பவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநர் பேச மாட்டார் என்பதற்காக திமுகவைத்துதான் சட்டம் என்பதை நிகழ்த்தி வந்துள்ளனர். பயம் காட்டி அரசியல் செய்யலாம் என ஆர் எஸ் பாரதி நினைக்கிறார். அது நடக்காது அவர் என்னதான் தலைகீழாக நின்றாலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதி அளித்துள்ளார். நேற்று ஆர்.எஸ்.பாரதி தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என நினைகிறார்கள். ஆனால், தொல்லை கொடுத்தால் எவனும் நீண்ட காலம் வாழ முடியாது, இருக்க முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
