"மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள்"- கமல்ஹாசன்...!

Makkal needhi maiam Party leader Kamal Haasan said that all places of the world knocked to restore sons

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து 31-வது ஆண்டு தொடங்கியுள்ளது.பேரறிவாளன் தனது வாழ்நாளின் பாதி பகுதியை சிறையிலேயே கழித்து விட்டார்.அவருடன் 6 தமிழர்களும் 30 ஆண்டுகளாக சிறையில் வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால்,தற்போது,பேரறிவாளனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும்,பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரும், இன்று வரை பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்றனர்.

இந்நிலையில்,பேரறிவாளன் விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:”மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?”,என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

unknown node