வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மும்பையில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின் இரண்டு மணிநேரத்துக்கு பிறகு நிகழ்வில் கலந்துகொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதுகுறித்து, துஷார் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற என்னை காவல்துறை தடுப்பு காவலில் வைத்துள்ளது. இந்த வரலாற்று நாளில் எனது முன்னோர்கள் பிரிட்டிஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில், நான் செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் ரிக்ஷாவில் ஏறினேன். நாங்கள் பாந்த்ராவை அடைந்ததும், ஆகஸ்ட் கிராந்தி மைதானத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு முஸ்லீம் டாக்சியில் ஏறினேன். அவர் போலீஸ் காரைப் பார்த்து பீதியடைந்து என்னிடம் கூறினார். சாப் முஜே நஹின் ஃபஸ்னா’ (ஐயா, நான் இந்த விஷயங்களில் ஈடுபட விரும்பவில்லை). பின் ஓட்டுனரை சமாதானப்படுத்தியதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
unknown node