மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிலச்சரிவில் பெற்றோரை இழந்த 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை தத்தெடுக்க முடிவு.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிலும், ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கிய 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளன.
இந்த நிலச்சரிவு சம்பவத்தில் பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து உள்ளனர். இந்த குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அநாதைகளான 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை ஸ்ரீகாந்த் ஷிண்டே அறக்கட்டளை கவனித்து கொள்ளும். ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டேவால் நடத்தப்படும் அறக்கட்டளை வழியே அவர்களுக்கான அனைத்து கல்வி மற்றும் இதர செலவுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
