NLC நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை.
NLC நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாக, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈபிஎஸ் அறிக்கை
unknown nodeஅந்த அறிக்கையில், ‘NLC நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
சமீப காலமாக, வாரந்தோறும் விடியா அரசின் அமைச்சரும், அதிகாரிகளும் விவசாயிகளை அழைத்து மிரட்டுவதை விட்டுவிட்டு, மத்திய அரசோடும், NLC நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், R&R சட்டப்படி குழு அமைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையைத் தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.
எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையிலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node