'பட்டியல் வைத்துள்ளேன்' – ஈபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்..!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள் பட்டியல் வைத்துள்ளேன் என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள் பட்டியல் வைத்துள்ளேன் என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நாள்தோறும் கொலை கொள்ளை நடக்கிறது என தெரிவித்திருந்தார்.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள்  குறித்த பட்டியல் வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும், அவரை பேச அனுமதியுங்கள், நான் ஓடி ஒளிய போவதில்லை. தயாராக இருக்கிறேன் என சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் கூறிய எதிர் கட்சி தலைவருக்கு பதிலளித்த முதல்வர், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.  மேலும் கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது திமுக ஆட்சி தான் என தெரிவித்துள்ளார்.