கர்நாடக தேர்தல் சுவாரஸ்யம்.! 1 ரூபாய் காசுமழை பொழிந்த சுயேச்சை வேட்பாளர்.!

கர்நாடகாவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையை ஒரு ரூபாய் நாணயமாக செலுத்திய வியப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையை ஒரு ரூபாய் நாணயமாக செலுத்திய வியப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் டெபாசிட் தொகை ரூ.10,000 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாத்கிர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் யாங்கப்பா தனது டெபாசிட் கட்டணமான ரூ.10,000 ஆயிரத்தை ஒரு ரூபாய் நாணயமாக கொடுத்துள்ளார். இந்த தொகையை எண்ணுவதற்கு அதிகாரிகள் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அவர் கூறுகையில், ஒரு ரூபாய் மட்டுமல்ல, உங்கள் ஒரு வாக்கினால், நீங்கள் ஒரு நாள் எனக்கு வாக்களியுங்கள், நான் உங்களுக்கு வறுமையிலிருந்து விடுதலை தருவேன் என்று கூறியுள்ளார். மேலும், தொகுதி முழுவதும் நடந்து சென்று வாக்காளர்களிடம் இருந்து நாணயங்களை சேகரித்ததாக யாங்கப்பா கூறினார்.