சூரப்பா வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் – கமல்ஹாசன்

Makkal Needhi Maiam leader Kamal Haasan Says Surappa is an honest man who didn't give into authoritative pressure

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? என ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில்  விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சுரப்பா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.வீடியோவில் பேசிய கமல்,அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர். சூரப்பாவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் கொள்கை மீது நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.ஆனால் சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் .ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? என்று தெரிவித்துள்ளார்.

unknown node