காலஷேத்ரா விவகாரம் – சட்ட பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தோறும் எனவும் மாணவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும், மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் மாணவிகள் மின்னஞ்சலில் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், விசிக எம்.எல்.ஏ. பாலாஜி, சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.