#Justnow : கரூரை தொடர்ந்து கோவையில் அமலாக்கத்துறை சோதனை..!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டிலும், தனலட்சுமி மார்பில்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில்

Enforcement Directorate Logo

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டிலும், தனலட்சுமி மார்பில்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை சோதனைக்காக மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரை தொடர்ந்து தற்போது கோவையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் முத்து பாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.