என்னைப் போன்றோர் இந்த அவையில் வந்து அமர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் பெரியார் என முன்னாள் சபாநாயகர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பேரவையில் உரையாற்றினார். பேசிய அவர், வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று; வரலாற்றின் முழு முக்கியமான நாள் வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த அறிவிப்பிற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபால் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், முதல்வர் இன்று நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னைப் போன்றோர் இந்த அவையில் வந்து அமர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் பெரியார்.