சென்னையில் ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல, அவர்களுக்கும் தகுதி உள்ளது என ஆளுநர் தமிழிசை கூறினார்.
சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் அம்பேத்கர் ஜெயந்தியாக இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
குறுகிய வட்டத்தில் சுருக்க கூடாது :
unknown nodeஇதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அம்பேத்கார் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை, இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு தொலைநோக்கு பார்வையை உருவாக்கியுள்ளார். மேலும், சிலர் அம்பேத்கரை குறுகிய நோக்கத்தோடு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் எனவும் பன்முகத்தன்மை கொண்ட அம்பேத்கரை குறுகிய வட்டத்தில் சுருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
ஆளுநர்களுக்கும் தகுதி உள்ளது :
unknown nodeமேலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரும் கோரிக்கைகளை பரிசீலிப்பதால், சில சட்டங்கள் இயற்றுவதில் காலதாமதம் ஆகிறது. என்னைப் பொறுத்தவரை ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுநர்களுக்கும் தகுதி உள்ளது எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து, ஆளுநர் மீது கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் சொல்லக்கூடிய கருத்துகள் அவர்களை குத்தி கிழிப்பது போல் இல்லாமல் சகோதரத்துவத்தோடு இருக்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.