மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி திரு.சீமான் இப்படிப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வேட்பாளர் அறிமுக விழாவின் போது மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் சேர்வதற்காக என்னை வந்து சந்தித்தார் என தெரிவித்திருந்தார்.
unknown nodeஇதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து,சிறப்பாக மக்கள் பணியாற்றி,மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி திரு.சீமான் இப்படிப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது.
சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை என பதிவிட்டுள்ளார்.
unknown node