25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தியாவிடம் தீர்வு உள்ளது
unknown nodeஅப்போது பேசிய அவர், 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனை உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை.
பல பிரச்னைகளை தீர்க்கத் தெரியாமல் உலக நாடுகள் உள்ளன; ஆனால், இந்தியாவிடம் தீர்வு உள்ளது. 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என தெரிவித்துள்ளார்.