முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்..! திமுக காங்கிரஸ் கூட்டணி வெடி வெடித்துக் கொண்டாட்டம்..!

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 7000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பட்டாசு வெடித்து

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 7000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பட்டாசு வெடித்து  கொண்டாட்டம்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.

தபால் வாக்குகள்

இந்த நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் காங்கிரஸ் 62 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றது. அதிமுக 35 தபால் வாக்குகளை பெற்றிருந்தது.

முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த நிலையில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 7000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உளளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு பின்னடைவை சந்தித்துள்ளார்.  இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்..! திமுக காங்கிரஸ் கூட்டணி வெடி வெடித்துக் கொண்டாட்டம்..!