நான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திராவிட மண்தான் என காயத்ரி ரகுராம் பேட்டி.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
காயத்ரி ரகுராம் பேட்டி
unknown nodeசமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றசாட்டுகளை முன்வைத்த பின்னும் நான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திராவிட மண்தான்.
மிரட்டல் இருக்கத்தான் செய்கிறது. தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பை வழங்குகிறது. அண்ணாமலை திமுக ஊழல் குறித்து வெளியிட்டுள்ளது சரியாக தெரிவியவில்லை. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பதவியில் இல்லாதவர்களையெல்லாம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.