கடைசி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன்..! முன்னாள் முதல்வர் எடியூரப்பா

கர்நாடக சட்டசபையில் தனது கடைசி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் தனது கடைசி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மாநில முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா சட்டசபையில் பிரியாவிடை உரையாற்றினார். அவரது உரையில் தனது கடைசி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ஷிகாரிபுராவில் எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

இவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து சட்டசபை கூட்டத்தொடருக்குப் பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவரான பிஎஸ் எடியூரப்பா தனது வயது முதிர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சட்டசபையில் பிரியாவிடை உரையாற்றிய எடியூரப்பா, நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முன்பே கூறிவிட்டேன்.

நான் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தாலும் எனக்கு பிரதமர் மோடி அளித்த மரியாதையையும், கட்சி எனக்கு அளித்த பதவிகளையும் மறக்க மாட்டேன் என்று கூறினார். எனது கடைசி மூச்சு வரை பாஜகவை நிலைநிறுத்த பாடுபடுவேன் என்று எடியூரப்பா மேலும் கூறினார்.

கடைசி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன்..! முன்னாள் முதல்வர் எடியூரப்பா