கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு ! முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அர்ஜுன மூர்த்தி ட்வீட்

I am aware of the severe unhappiness actor Rajinikanth sir’s heart will be in right now- Arjunamurthy Ra tweet

கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில் ,முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.இன்னும் 2 நாட்களில் ரஜினி கட்சி துவங்குவதற்க்கான அறிவிப்பை அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று ரஜினி தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்த பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், மிகுந்த வருத்தமான சூழல் ரஜினிகாந்தின் இதயத்தில் தற்போது இருப்பதை அறிகிறேன்.ரஜினிகாந்தின் முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

unknown node