' நானும் டெல்டாக்காரன்தான்'- நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானதில் முதல்வர் பேச்சு..!

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம்,  உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர்  நேற்று உதயநிதி புதிய நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது எனவும், இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்

புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில்  திமுகவின் மன்னார்குடிஎம் எல்ஏ டிஆர்பி ராஜா மற்றும் அதிமுகவின் அருண்மொழி தேவன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் கீழ் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

முதல்வர் விளக்கம்

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில்,நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை மத்திய அமைச்சருக்கு வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினேன். எனது கடிதத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளார்.

நானும் டெல்டாக்காரன், நிச்சயம் உறுதியாக இருப்பேன்; மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என தெரிவித்துள்ளார்.