காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு இவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அவருக்கு ஐசியூவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
unknown node