இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இன்று பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேராசிரியர் அன்பழகனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
முதல்வர் ட்வீட்
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node