இனிமையான குரல் மற்றும் சிறந்த பணிகளுக்காக வாணி ஜெயராம் என்றும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி ட்வீட்.
சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தனியாக வசதி வந்துள்ளார். தலையில் அடிபட்ட காயங்களுடன் வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டுக்கு வந்த பணி பெண் கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்காததால் அவர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் வாணி ஜெயராம் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இவரது மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஓடியா என 19-மொழிகளில் 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் பதிவில், ‘இனிமையான குரல் மற்றும் சிறந்த பணிகளுக்காக வாணி ஜெயராம் என்றும் நினைவுகூரப்படுவார்; அவரது மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இரங்கல்கள்’ என பதிவிட்டுள்ளார்.
unknown node