வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...பிரதமர் மோடி டிவிட்.!!

கர்நாடக சட்டப்பேரவையில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 114

PM Modi

கர்நாடக சட்டப்பேரவையில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 114 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, மேலும், 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி ட்வீட்டர் பக்கத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்கு அளித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

unknown nodeunknown node

மற்றோரு டிவிட்டில் ” கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினர் செய்த கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்” என பதிவிட்டுள்ளார்.