உறுதியான வெற்றிக்காக ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி என ராகுல் காந்தி ட்விட்.
இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ஹிமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த உறுதியான வெற்றிக்காக ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றிக்கான வாழ்த்துக்களுக்குத் தகுதியானது. பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node