முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது அன்புத் தோழரும், மாண்புமிகு கேரள முதலமைச்சருமான திரு. பினராயி விஜயன்அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக கேரளாவை வலுவாக வைத்திருக்கவும், தேசத்தின் ஒற்றுமையில் மாநிலங்களின் வலிமையைக் காட்டவும் உங்களுக்கு மேலும் பலம் கிடைக்க வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node