ஆளுநர் மரபுகளை தாண்டி பேசுகிறார். எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என ஆள் நினைக்கிறார் என கே.எஸ்.அழகிரி பேட்டி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி இன்று சத்தியமூர்த்தி பவனில் சென்னையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகளை சந்தித்தார்.
unknown nodeஅதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, அரசியல் கருத்துக்களை பிரதமர் மோடி சொல்லட்டும், ஜேபி நட்டா சொல்லட்டும், அண்ணாமலை சொல்லட்டும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.
unknown nodeஆனால் ஒரு ஆளுநர் எப்படி சொல்லலாம். ஆளுநர் மரபுகளை தாண்டி பேசுகிறார். எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என ஆள் நினைக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் தீண்டாமை உள்ளது. தீண்டாமை என்பது எல்லா கிராமங்களிலும் இருக்கிறது ஆனால் இந்த தீண்டாமையை அகற்றுவதற்காக அறவே ஒழிப்பதற்காக நாம் எடுத்திருக்கும் முயற்சிகள் தான் முக்கியமானது. தீண்டாமைக்கு அடிப்படையே rss-சும் பாஜகவும் தான் என குற்றம்சாட்டியுள்ளார்.