ஒவ்வொரு துறையிலும் ஆளுநர் அரசியல் செய்து வருகிறார் – அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi said that the governor is acting without respecting the government elected by the people.

Minister ponmudi

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் என அமைச்சர் பொன்முடி பேட்டி.

சென்னையில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆளுநர் முயற்சி செய்கிறார். பல்கலைக்கழகம் தன்னிச்சையாக செயல்படவில்லை என ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் பத்திரிகைகளில் செய்தி கொடுப்பதன் அவசியம் என்ன?

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலையே  கூறிவிட்டார். எல்லாத்துறையிலும் தாம் தான் எல்லாம் என ஆளுநர் ரவி நினைக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார்.

பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் ஆளுநர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார். தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.