செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The Chief Minister said that Governor RN Ravi has no authority to remove Minister Senthil Balaji.

Tamilnadu CM MK Stalin

அமைச்சர் செந்தில் பாலாஜிய நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் பேட்டி.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு, ஜூலை 12-ஆம் தேதி வரை  நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜிய நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை; இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.