சென்னையில் நாளை மலர்கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நாளை மலர்க்கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில், கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் கலந்து கொள்வோர் கட்டணம் செலுத்தி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மலர்களால் அலங்காரம் இடம்பெறும் கண்காட்சியைப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறார்களுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.