பொது சிவில் சட்டத்தால் குறிப்பிட்ட மதமோ, இனமோ பாதிப்படைய போவதில்லை என கரு.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்தை ஆதரித்துஉரையாற்றி இருந்தார். பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு வாக்கு வங்கி அரசியல் செய்வதாகக் கூறி, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதுகுறித்து, அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும்நிலையில் பொது சிவில் சட்டத்தால் குறிப்பிட்ட மதமோ, இனமோ பாதிப்படைய போவதில்லை. நீதிமன்றம், சட்டம் வழக்கு போன்றவற்றிற்கு பொதுவான ஒரு அமைப்பு வேண்டும் என்பதாலேயே பிரதமர் நரேந்திரமோடி இதனை கூறியுள்ளார். முதலமைச்சர் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.
